வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: ஞாயிறு, 31 டிசம்பர் 2023 (18:11 IST)

‘தளபதி 68’ படத்தின் மாஸ் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்.. இரட்டை வேட சூப்பர் கெட்டப்..!

தளபதி விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி 68 படத்தின் படப்பிடிப்பு ஒரு பக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்னொரு பக்கம் இன்று மாலை இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்று தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அறிவித்திருந்தார் 
 
இந்த நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. இந்த படத்திற்கு ஏற்கனவே செய்தி வெளியானது போல் ’G.O.A.T’ என்ற தலைப்பு தான் வைக்கப்பட்டுள்ளது என்பதும் இந்த டைட்டில் போஸ்டரில் விஜய்யின் இரண்டு வேட கெட்டப்பும் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
குறிப்பாக வயதான வேடம் மற்றும் இளமையான வேடம்  ஆகிய இரண்டு கெட்டப்பில்,  இளமையான வேடம் அசத்தலாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தத்தில் புத்தாண்டு பிறக்கப்போகும் நேரத்தில் விஜய் ரசிகர்களுக்கு ஒரு சிறப்பான விருந்தாக இந்த ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva