1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : சனி, 30 டிசம்பர் 2023 (19:30 IST)

நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் டி.ராஜேந்தர் மயக்கம்!

T rajendar
தூத்துக்குடி லெவிஞ்சிபுரத்தில் மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கியபோது, கூட்ட நெரிசலில் சிக்கி  நடிகர் டி.ராஜேந்தர் மயக்கம் அடைந்தார்.

சமீபத்தில், தென்மாவட்டங்களில் அதிகனமழை பெய்தது. இதில், தூத்துக்குடி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய  தென்மாவட்டங்களில் வரலாறு காணாத மழையால் வெள்ளம் சூழ்ந்து மக்கள் பாதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், பெருமழை மற்றும் பெருவெள்ளத்தினால்   முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு நிவாரண உதவிகள் வழங்கி வருகிறது. அரசுடன் இணைந்து, சமூக ஆர்வலர்கள், சினிமா பிரபலங்களும் உதவிகள் செய்து வருகின்றனர்.

இன்று  நடிகர் விஜய், நெல்லையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கினார்.

அதேபோல், நடிகரும் இயக்குனருமான டி.ராஜேந்தர்  தூத்துக்குடி லெவிஞ்சிபுரத்தில் மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கினார்.

அப்போது கூட்ட நெரிசலில் சிக்கி டி.ராஜேந்தர் மயக்கம் அடைந்தார். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு  நலத்திட்ட உதவிகள் வழங்கிக் கொண்டிருக்கும்போது மயக்கம் அடைந்த நிலையில், மயக்கம் தெளிந்த பின்னர் நடிகர் டி.ராஜேந்தர் காரில் அழைத்து சென்றனர்.

இதனால் சற்று நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.