1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: சனி, 18 ஜூன் 2022 (21:53 IST)

’தளபதி 67’ படத்தின் தயாரிப்பாளர் லோகேஷ் கனகராஜா?

lokesh
தளபதி விஜய் நடிக்க இருக்கும் 67-வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார் என்பது தெரிந்ததே. 
 
லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றதை அடுத்து அவருடைய அடுத்த படமான தளபதி 67 படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது 
 
இந்த நிலையில் தளபதி 67 படத்தில் இணை தயாரிப்பாளராக லோகேஷ் கனகராஜ் இணைய உள்ளதாகவும் அதற்கு விஜய் ஒப்புதல் அளித்து விட்டதாகவும் கூறப்படுகிறது. 
 
விக்ரம் படத்தில் அவருக்கு தாறுமாறான சம்பளம் கிடைத்ததை அடுத்து அந்த பணத்தை அவர் தளபதி 67 படத்தில் முதலீடு செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.