வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 17 ஜூன் 2022 (17:17 IST)

நான்கு டைட்டிலை பதிவு செய்த ''விஜய்66'' பட தயாரிப்பாளர்

vijay66
தமிழ் சினிமாவில் முன்னணி  நடிகர் விஜய்.இவர் நடிப்பில் உருவாகிவரும் விஜய்66 படத்தின் சூப்பர் அப்டேட் வெளியாகியுள்ளது..

தமிழ் சினிமாவில் முன்னணி நநடிகர் விஜய். இவர் நடிப்பில், தெலுங்கு இயகுனர் வம்சி இயக்கத்தில் உருவாகிவரும் படம் விஜய்66. இப்படத்தில் விஜய்ய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா  நடிக்கிறார். இவர்களுடன் இணைந்து, பிரகாஷ்ராஜ், ஷ்யாம், உள்ளிட்ட  நடிகர்கள் நடிக்கவுள்ளார்.

வேகமாக நடந்து வரும் விஜய்66 படத்திற்கு எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், வரும் ஜூன் 22 ஆம் தேதி விஜய் பிறந்த நாளை முன்னிட்டு, இப்படத்தில் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸாகவுள்ளது.

நேரடி தெலுங்கு தமிழில் உருவாகிவரும் இப்படத்திற்கு Vaarasudu –வாரசுடு என்று பெயரிட்டுள்ளதாகவும், இதற்குப் பொருள் வெற்றி எனக் கூறப்படுகிறது.

மேலும், இப்படத்தின் தலைப்பு லீக் ஆகும் பட்சத்தில் முன்னெச்சரிக்கையாக சுமார்  இப்படத்திற்கு , குடும்பம் ,வாரிசு,  உள்ளிட்ட சுமார்  4 தலைப்புகளை தயாரிப்பாளார் லலித் பதிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகிறது.  விஜய் 66 படத்தின் ஷூட்டிங்க் வேகமாக  நடந்து வரும் நிலையில், இப்படத்தின் தலைப்பு என்ன என்றறிய ரசிகர்கள் ஆர்வத்தில் உள்ளனர்.