செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : சனி, 18 ஜூன் 2022 (19:29 IST)

ரஜினியை கிண்டல் செய்தாரா சிம்பு பட தயாரிப்பாளர் ?

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் 169வது படத்துக்கு 'ஜெயிலர்' என பெயர் வைக்கப்பட்டுள்ளது. நெல்சன் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்துக்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார்.

மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்திற்கு திரைக்கதை அமைக்கும் பணியில் கே.எஸ்.ரவிக்குமார் ஈடுபட்டுள்ளார்.

இன்று இப்படத்தின் போஸ்டர் வெளியானது. இதில், மிகப்பெரிய ஒரு அறுவாள் இருப்பது போன்று ஃபஸ்ட்லுக் இருந்தது. இதிலிருந்தே இப்படம் ஆக்சன் படமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

ரஜினிக்கு மூன்று முகம் மாதிரி இப்படம் இருக்கும் என கருத்துகள் கூறப்படும் நிலையில், ரஜினியின் சினிமா வரலாற்றில் இதுவரை ரஜினியின் புகைப்படம் இல்லாமல் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியானதில்லை. ஆனாலும், ரசிகர்கள் இதை வரவேற்றுள்ளனர்.
இதுகுறித்து, மா நாடு பட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது டுவிட்டர் பக்கத்தில், எத்தனை குதிரைகள் ஓடினாலும், @rajinikanth  இந்தக் குதிரை விழும். சட்டென எழும். வெற்றிகொள்ளும் குதிரை❤ சாதாரணமாக நினைத்துவிட வேண்டாம். ரஜினி என்ற 3 எழுத்து மேஜிக் #ஜெயிலர் மூலம் மீண்டும் நிகழும். வாழ்த்துகள் @Nelsondilpkumar & டீம்.@sunpictures எனப் பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில், இதுகுறித்து பிரபல மீடியாவில் ஒரு செய்தி வெளியிட்டிருந்தனர். இதைப் பார்த்த, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, பாராட்டிற்கும் கிண்டலுக்கும் வித்தியாசம் தெரியாதவங்க எழுத வந்துட்டா இப்படித்தான் பூடம் தெரியாம சாமியாடுவாங்க எனப் பதிவிட்டுள்ளார்.