மீண்டும் உதயநிதி தயாரிப்பில் விஜய்?
தமிழ் திரையுலகில் தயாரிப்பாளர் உதயநிதி அறிமுகமான உடன் தயாரித்த முதல் படம் விஜய் நடித்த குருவி என்பது தெரிந்ததே. அதன்பின் அவர் பல திரைப்படங்களை தயாரித்தவர் என்பதும் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் மீண்டும் விஜய் படத்தை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. விஜய் நடிக்கும் அடுத்த திரைப்படத்தை தில் ராஜூ தயாரிக்க உள்ளார் என்ற நிலையில் அதற்கு அடுத்த திரைப்படத்தை அதாவது தளபதி 67 படத்தை உதயநிதி தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது
இது குறித்த பேச்சுவார்த்தை நடந்து வருவதை அடுத்து நீண்ட இடைவெளிக்குப் பின் விஜய் மற்றும் உதயநிதி இணைய உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது