செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 16 ஜூன் 2022 (16:57 IST)

‘தளபதி 66’ படத்தில் 2 பாடல்களில் பிரபுதேவா… வெளியான தகவல்!

விஜய் நடிப்பில் வம்சி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

விஜய் நடித்து வரும் தளபதி 66 படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கிய நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது இன்று ஐதராபாத்தில் தொடங்கி உள்ளது. படத்தில் நடிக்கும் முக்கியக் கதாபாத்திரங்களுக்கான நடிகர் நடிகைகள் பற்றி onboard தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரபு, பிரகாஷ் ராஜ் மற்றும் ஜெயசுதா ஆகியோர் நடிப்பதை படக்குழு உறுதி செய்துள்ளது. மேலும் ‘தளபதி 66’ படம் 2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் எனவும் அந்த போஸ்டர்களில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்னும் படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் ஆகியவை வெளியாகாத நிலையில் விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22 ஐ முன்னிட்டு ஜூன் 21 ஆம் தேதி தளபதி 66 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என அதிகாரப்பூர்வமற்ற தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான போட்டோஷூட் சமீபத்தில் சென்னையில் நடந்துள்ளதாக சொல்லப்படுகிறது. 

இந்நிலையில் இந்த படத்தின் இரண்டு பாடல்களுக்கு பிரபுதேவா நடனம் அமைக்க உள்ளாராம். ஏற்கனவே பிரபுதேவா மற்றும் விஜய் கூட்டணியில் உருவான போக்கிரி மற்றும் வில்லு ஆகிய படங்கள் ரசிகர்களைக் கவர்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.