செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 16 ஜூன் 2022 (08:22 IST)

டிரெண்டிங்கில் ஹலிமதி ஹபீபோ! யூடியூபில் 100 மில்லியன் வீயூஸ்!!

அரபிக் குத்து பாடல் யூடியூபில் 10 கோடி பார்வையாளர்களை கடந்து டிரெண்டிங்கில் முன்னணி இடம் பிடித்துள்ளது. 

 
விஜய்யின் பீஸ்ட் படத்தின் முதல் சிங்கிள் பாடலான அரபிக் குத்து பாடல் இணையத்தில் தெறி ஹிட் அடித்தது.  படம் ரிலீஸான பின்பு இந்த படத்தில் இடம் பெற்றுள்ள அரபி குத்து பாடல் விஜய் மற்றும் பூஜா ஹெக்டேவின் நடன் ஆசைவுகளால் நேஷ்னல் ஹிட் ஆனது. 
 
ரசிகர்கள் முதல் திரை உலகினர் வரை இந்த பாடலுக்கு நடனமாடி அந்த வீடியோவை வெளியிட்டு வந்தனர். அரபிக்குத்து பாடலுக்கு பிறகு ஜாலியோ ஜிம்கானா என்ற பாடலும் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. ஆனாலும் அரபிக்குத்து பாடல் தொடர்ந்து ரசிகர்களைக் கவர்ந்துகொண்டே உள்ளது. 
 
இந்நிலையில் அரபிக் குத்து பாடல் யூடியூபில் 10 கோடி பார்வையாளர்களை கடந்து டெண்டிங்கில் முன்னணி இடம் பிடித்துள்ளது. ஆம், கடந்த மே 9 ஆம் தேதி வெளியான அரபிக் குத்து வீடியோ பாடல், இந்திய அளவிலான டிரெண்டிங் பாடல் வரிசையில் 4வது இடத்திலும், தமிழ் பாடல்கள் வரிசையில் முதல் இடத்திலும் உள்ளது.