1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வியாழன், 16 ஜூன் 2022 (15:55 IST)

''விஜய்66 '' படத்தின் ஷூட்டிங் மாற்றம்.....

vijay66
தமிழ் சினிமாவில் முன்னணி  நடிகர் விஜய்.இவர் நடிப்பில் உருவாகிவரும் விஜய்66 படத்தின் சூப்பர் அப்டேட் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நநடிகர் விஜய். இவர் நடிப்பில், தெலுங்கு இயகுனர் வம்சி இயக்கத்தில் உருவாகிவரும் படம் விஜய்66. இப்படத்தில் விஜய்ய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா  நடிக்கிறார். இவர்களுடன் இணைந்து, பிரகாஷ்ராஜ், ஷ்யாம், உள்ளிட்ட  நடிகர்கள் நடிக்கவுள்ளார்.

வேகமாக நடந்து வரும் விஜய்66 படத்திற்கு எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், வரும் ஜூன் 22 ஆம் தேதி விஜய் பிறந்த நாளை முன்னிட்டு, இப்படத்தில் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸாகவுள்ளது.

இந்த நிலையில், சமீபத்தில் விஜய்66 பட ஷூட்டிங் சென்னை ஈசியார் ரிசார்டில் நடந்த போது,  ஸ்பபாட்டில் இருந்து விஜய்யின் புகைப்படங்கள் வெளியாகி வைரலானது. இது படக்குழுவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந் நிலையில்,  யாருக்கும் தெரியாத வகையில்  மற்றோரு தனியார் இடத்தில் விஜய்66 படத்தை ஷூட்டிங் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் இதற்கான பணிகள் நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.