1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Updated : திங்கள், 2 மார்ச் 2020 (18:58 IST)

ரசிகர்கள் அனுமதி இல்லை.. சத்தமில்லாமல் நடைபெறப்போகும் மாஸ்டர் ஆடியோ லான்ச்?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் ’மாஸ்டர்’ படத்தில் நடித்து வருகிறார். கல்லூரி பேராசிரியராக விஜய் நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக மாளவிகா மோகன் நடித்துள்ளார். மாணவராக சாந்தனு பாக்யராஜும் , வில்லனாக விஜய் சேதுபதியும் நடித்துள்ளனர்.
 
மேலும் ஆன்ட்ரியா, 96 புகழ் கௌரி கிஷன் உள்ளிட்ட சிலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இப்படத்தின் முதல் மூன்று போஸ்டர்கள் அடுத்தடுத்து வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதையடுத்து மிகவும் எதிர்பார்க்கப்பட்டு வெளியான குட்டி கதை சிங்கிள் பாடல் தற்போது வரை 26 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்தது வருகிறார்.
 
கடந்த சில நாட்களாகவே நெய்வேலி உள்ளிட்ட பகுதிகளில் விறு விறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக இன்று நிறைவடைந்தது. அடுத்ததாக வருகிற மார்ச் 15ம் தேதி நடைபெறவுள்ள மாஸ்டர் ஆடியோ வெளியீட்டு விழாவிற்காக காத்திருந்த ரசிகர்களுக்கு வருத்தமான தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அதாவது, சென்னை லீலா பேலஸில் நடைபெறவுள்ள இந்த விழாவில் ரசிகர்கள் அனுமதி இல்லை என்றும் வெறும் 250 பேர் மட்டும் கொண்ட படக்குழுவினரே இதில் பங்கேற்பார்கள் எனவும் தகவல் கிடைத்துள்ளது. இந்நிகழ்ச்சி சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.