திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 2 நவம்பர் 2019 (19:53 IST)

விஜய் மிஸ் செய்த படத்தின் டைட்டிலை அறிவித்த கவுதம் மேனன்!

அஜித் உள்பட தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் படங்களை இயக்கிய இயக்குனர் கௌதம் மேனன் விஜய்யுடன் இணைந்து ஒரு படத்தை இயக்குவதாக இருந்தது. அந்த படத்திற்கு ’யோகன் அத்தியாயம் ஒன்று’ என்ற டைட்டில் வைக்கப்பட்டு, முழுக்க முழுக்க அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் இந்த படத்தை படமாக்கவும் முடிவு செய்யப்பட்டது. இந்த படத்தின் ஆரம்ப கட்ட பணிகள், நியூயார்க்கில் லொகேஷன் பார்ப்பது என ஒரு சில கோடிகளும் செலவு செய்யப்பட்டது. 
 
ஆனால் திடீரென விஜய் இந்த படத்தில் இருந்து பின்வாங்கினார். இதனால் இந்த படம் டிராப் ஆனது. இந்த நிலையில் ஐந்து ஆண்டுகள் கழித்து தற்போது இந்த படம் மீண்டும் உயிர் பெற்றுள்ளது. இந்த படத்தில் விஜய் நடிக்க வேண்டிய வேடத்தில் பிரபல தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் அவர்களின் நெருங்கிய உறவினர் வருண் என்பவர் நடிக்கிறார். இந்த படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரிக்க உள்ளது 
 
இந்த நிலையில் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் மற்றும் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது இந்த படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு ’இமைபோல் காக்க’ என்று வழக்கமாக கவிதைத் தனமான தலைப்பை கௌதம் மேனன் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தில் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் ஹாலிவுட் தரத்தில் இருக்கும் என்றும் இந்த படம் வரும் காதலர் தினத்தில் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது