செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : ஞாயிறு, 20 ஜனவரி 2019 (20:41 IST)

தளபதி 63' படத்தின் முதல் அதிகாரபூர்வ வீடியோ வெளியீடு

'தளபதி விஜய் நடிக்கும் அடுத்த படமான 'தளபதி 63' படத்தின் பூஜை இன்று சென்னையில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. இந்த பூஜையில் விஜய், அட்லி, அர்ச்சனா கல்பாதி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். பூஜை குறித்த புகைப்படங்களும் இன்று காலை முதல் சமூக இணையதளங்களில் டிரெண்ட் ஆனது

இந்த நிலையில் சற்றுமுன்னர் ஏஜிஎஸ் நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் 'தளபதி 63' படத்தின் பூஜை குறித்த வீடியோ வெளியாகியுள்ளது. 46 வினாடிகள் மட்டுமே உள்ள இந்த வீடியோ இந்த படத்தின் அதிகாரபூர்வ முதல் வீடியோ என்பது குறிப்பிடத்தக்கது. வழக்கம்போல் இந்த வீடியோவும் யூடியூபில் பெரும் வரவேற்பை பெற்று ஒருசில நிமிடங்களில் ஆயிரக்கணக்கான பார்வையாளர்களையும், லைக்ஸ்களையும் பெற்று வருகிறது.

விஜய், நயன்தாரா, கதிர், விவேக், யோகிபாபு, டேனியல் பாலாஜி, ஆனந்த்பாபு, உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கின்றார். இந்த படத்தை வரும் தீபாவளி தினத்தில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.