திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: செவ்வாய், 13 ஜூலை 2021 (19:33 IST)

திரையரங்குகள் திறந்தால் தான் ‘தலைவி’ ரிலீஸ்: திட்டவட்டமாக அறிவித்த கங்கனா!

திரையரங்குகள் திறந்தால்தான் ‘தலைவி’ திரைப்படம் ரிலீஸ் ஆகும் என்றும் இந்த திரைப்படம் கண்டிப்பாக ஓடிடியில் ரிலீஸ் ஆகாது என்றும் திட்டவட்டமாக நடிகை கங்கனா ரணவத் தெரிவித்துள்ளார் 
 
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக ‘தலைவி’ திரைப்படத்தில் கங்கனா ரனாவத் நடிப்பில் நடித்துள்ளார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் ‘தலைவி’ திரைப்படம் ஓடிடியில் ரிலீசாக போவதாக ஒரு சில ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியானது
 
இதனை அடுத்து இந்த செய்தியை திட்டவட்டமாக மறுத்துள்ள கங்கனா, நாடு முழுவதும் திரை அரங்குகள் திறந்த பின்னர் தான் ‘தலைவி’ திரைப்படம் ரிலீஸ் ஆகும் என்றும் ஓடிடியில் முதலில் ரிலீஸ் ஆகாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
இதனை அடுத்து ‘தலைவி’ ரிலீஸ் குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கங்கனா, அரவிந்தசாமி, பூர்ணா, சமுத்திரக்கனி நாசர் உள்ளிட்ட பலர் நடித்த இந்த திரைப்படத்தை ஏ.எல்.விஜய் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது