திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Modified: திங்கள், 12 ஜூலை 2021 (17:06 IST)

அசுரன் படம் ஓடிடியில் ரிலீஸ்...ரசிகர்கள் கொண்டாட்டம்

தமிழில் வெளியாகி பெருவெற்றி பெற்ற அசுரன் படத்தின் தெலுங்கு ரீமேக்கான
நாரப்பாவின் டீசர் வெளியாகிப் பெரும் வரவேற்பைப்பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது.
 

தனுஷ், மஞ்சுவாரியர் நடிப்பில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் இசையில் கலைப்புலி எஸ் தாணு அவர்களின் தயாரிப்பில் கடந்தாண்டு வெளிவந்த அசுரன் திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது

இந்த படத்தை பல மொழிகளிலும் ரீமேக் செய்யும் முனைப்புகளில் உள்ளனர்.

தெலுங்கில் அசுரன் படத்தில் நடிப்பதற்கு நடிகர் வெங்கடேஷ் ஆர்வமாக இருக்க தமிழில் தயாரித்த தாணுவே தெலுங்கு தயாரிப்பாளர் சுரேஷ் பாபு அவர்களுடன் இணைந்து இந்த படத்தை தெலுங்கில் தயாரிக்கின்றார். இந்நிலையில் அந்த படத்தில் மஞ்சு வாரியார் கதாபாத்திரத்தில் நடிகை பிரியா மணி நடித்துள்ளார்.

இந்நிலையில் நேற்று வெங்கடேஷின் பிறந்தநாளை முன்னிட்டு நாரப்பாவின் டீசர் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. அச்சு அசல் அசுரன் போலவே எடுக்கப்பட்டுள்ளதாக ரசிகர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் இப்படத்தின் அனைத்துப் பணிகளும் முடிந்து ரிலீஸுக்குத் தயாராக இருந்த நிலையில் இப்படத்தை நேரடியாக தியேட்டரில் ரிலீஸ் செய்ய முடியவில்லை. எனவே நாரப்பா படத்தை ஜூலை மாதத்தில் அமேசான் பிரைம் என்ற ஓடிடி தளத்தில் வெளியாகும் எனக் கூறப்பட்டது.இந்நிலையில் தெலுங்கு அரசுன் படம் வரும் ஜூலை 20 ஆம் தேதி அமேசான் வீடியோ பிரைம் என்ற ஓடிடி தளத்தில் வெளியாகும் அதிகார்ப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.