புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Modified: புதன், 8 ஜனவரி 2020 (18:53 IST)

நடு ராத்திரியில் உருவான திடீர் ”ஜெயலலிதா” சிலை.. மக்கள் பரபரப்பு

மன்னார்குடியில் நள்ளிரவில் திடீரென திறந்துவைக்கப்பட்ட எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் கோபால சமுத்திரம் கீழ வீதியில் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு எம்.ஜி.ஆர்.-ன் வெண்கல சிலை ஒன்று நிறுவப்பட்டது. ஆனால் வெகு காலமாகியும் அந்த சிலை திறந்துவைக்கப்படவில்லை.

கடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவின் போது திறந்துவைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எம்.ஜி.ஆர். சிலை துணிகளால் முழுவதும் மூடப்பட்டு 15 அடி உயரத்திற்கு இரும்பு சீட்டுகளால் பாதுக்காக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் எம்.ஜி.ஆர். சிலை அருகிலேயே ஜெயலலிதாவின் 7 அடி உயர வெண்கல உருவ சிலை அமைக்கப்பட்டு, இரண்டு சிலைகளும் அவசர அவசரமாக திறக்கப்பட்டு ரோஜாப்பூ மாலை அணிவிக்கப்பட்டது. அதிகாலை அவ்வழியாக சென்ற ஊர் மக்கள் அதனை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.