1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 2 ஜனவரி 2020 (22:08 IST)

முன்னாள் ஊராட்சி தலைவரின் இரண்டு மனைவிகளும் வெற்றி!

உள்ளாட்சி தேர்தல் முடிவுகளில் பல்வேறு சுவாரஸ்யங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. 21 வயது கல்லூரி மாணவி முதல் 82 வயது முதிய பெண் வரை வெற்றிகளை குவித்து வரும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் முன்னாள் ஊராட்சி ஒன்றிய தலைவரின் இரு மனைவிகளும் வெற்றி பெற்ற செய்தி தற்போது வெளியாகியுள்ளது
 
வந்தவாசி அருகே கோவில் குப்பம், வழுர் அகரம் ஆகிய இரண்டு ஊராட்சி மன்றத் தலைவர்களாக முன்னாள் ஊராட்சி ஒன்றிய தலிஅவர் தனசேகர் என்பவரின் இரு மனைவிகளான செல்வி தனசேகரன் மற்றும் காஞ்சனா தனசேகரன் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.
 
வழூர்-அகரம் கிராமத்தின் ஊராட்சி தலைவர் பதவிக்கு தனசேகரின் முதல் மனைவியான செல்வி தனசேகரனும், கோவில் குப்பம் கிராமத் தலைவர் தலைவர் பதவிக்கு அவருடைய இன்னொரு மனைவியான காஞ்சனா தனசேகரனும் போட்டியிட்டனர்.
 
இந்த நிலையில் சற்றுமுன் வெளியான இந்த இரு தொகுதிகளின் முடிவுகளின்படி இருவருமே வெற்றி பெற்றுள்ளனர். இந்த வெற்றியை தனசேகரின் குடும்பமே கொண்டாடி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது