ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: புதன், 3 பிப்ரவரி 2021 (19:31 IST)

அருண்விஜய் படத்தில் இணைந்த குணசித்திர நடிகர்!

அருண் விஜய் நடிக்க இருக்கும் ’அருண்விஜய் 33’ என்ற திரைப்படத்தை பிரபல இயக்குனர் ஹரி இயக்க உள்ளார் என்பது தெரிந்ததே. இந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் தேர்வு தற்போது நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் பிரபல குணசித்திர நடிகர் தலைவாசல் விஜய் இணைந்துள்ளார் 
 
ஏற்கனவே இந்த படத்தில் ராதிகா, பிரகாஷ்ராஜ், யோகிபாபு ஆகியோர் இணைந்தனர் என்பதும், இந்த படத்தில் அருண் விஜய் ஜோடியாக ப்ரியா பவானி சங்கர் நடிக்க உள்ளார் என்பதும் தெரிந்ததே. இந்த படத்தின் நடிகர் நடிகைகள் கிட்டத்தட்ட முடிவாகி விட்ட நிலையில் நாளை முதல் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
இந்த படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் இறுதியில் தொடங்கி தொடர்ச்சியாக 50 நாட்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், வரும் மே மாதம் இந்த படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.