வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 11 அக்டோபர் 2023 (13:35 IST)

'லியோ'வை விசாரித்த தலைவர் ரஜினிகாந்த்- லோகேஷ் கனகராஜ் நெகிழ்ச்சி

rajini - lokesh kanakaraj
விஜய்யின் லியோ படத்தை  நடிகர் ரஜினிகாந்த் விசாரித்துள்ளதாக தலைவர் 172 பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவர் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் லியோ. இந்த படத்தில் விஜய்யுடன் இணைந்து,  சஞ்சய் தத், அர்ஜுன், கௌதம் மேனன், மிஷ்கின் மற்றும் திரிஷா என ஏகப்பட்ட நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.

சமீபத்தில், விஜய்யின் லியோ திரைப்பட டிரைலர்  வெளியாகி இணையதளங்கில் டிரெண்டிங்கிங் ஆனது.  இப்படம் வரும் அக்டோபர் 19 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.

ஏற்கனவே இப்படத்தின் முதல் சிங்கில் நா ரெடிதான், 2 வது சிங்கில் படாஸுதான் ஆகிய பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்ற நிலையில், இப்படத்தின் 3 வது சிங்கில்  அன்பெனும் என்ற பாடல் நாளை ரிலீஸாகும் என படக்குழு   நேற்று அறிவித்தது.

இந்த நிலையில்,லியோ படத்தை இயக்கியுள்ள லோகேஷ் கனகராஜ், தலைவர் 172 படத்தை இயக்கவுள்ள நிலையில், இதுதொடர்பாக ரஜினியுடன் அவ்வப்போது லோகேஷ் கனகராஜ் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

சமீபத்தில் ஒரு பேட்டியில் லோகேஷ் கனகராஜ்,  ''ரஜினி சாரை நான் சந்திக்கிற ஒவ்வொரு முறையும் லியோ ஸ்டெட்டஸ் பற்றி விசாரித்தார்…..என்னோட ஒவ்வொரு படத்திற்கும் அவர் என்னை வாழ்த்தியுள்ளார். கைதி படத்திற்குப் பின் தொடர்ந்து அவரை சந்தித்து பேசியிருக்கிறேன். ஆல் தி பெஸ் ஃபார் லியோ சக்ஸஸ் என்று கூறினார்'' என்று தெரிவித்துள்ளார்.