மாநாகரத்துக்கு முன்பு நான் எழுதிய கதை… தலைவர் 171 பட அப்டேட் கொடுத்த லோகேஷ்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் தலைவர் 171 திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் சில வாரங்களுக்கு முன்னர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க, அன்பறிவ் சண்டைக் காட்சிகளை இயக்குவார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த படம் பற்றி சமீபத்தில் பேசியுள்ள இயக்குனர் லோகேஷ் “இந்த கதையை நான் மாநகரம் படத்துக்கு முன்பாக எழுதினேன். ஆனால் அப்போது ரஜினி சாரை மனதில் வைத்தெல்லாம் எழுதவில்லை. அப்போது அந்த கற்பனை கூட எனக்கில்லை” எனக் கூறியுள்ளார்.
தற்போது விஜய்யை வைத்து லியோ படத்தை இயக்கி முடித்துள்ள லோகேஷ், அதன் ப்ரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். அக்டோபர் 19 ஆம் தேதி லியோ ரிலீஸ் ஆனதும், அவர் சிறிய ஓய்வுக்குப் பின்னர் தலைவர் 171 பட வேலைகளை தொடங்குவார் என சொல்லப்படுகிறது.