ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 9 அக்டோபர் 2023 (06:48 IST)

தலைவர் படத்த எந்த அழுத்தமும் இல்லாமல் ரிலாக்ஸா பண்ணப் போறேன்… இயக்குனர் லோகேஷ்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் ‘தலைவர் 171’ திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் சில வாரங்களுக்கு முன்னர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க, அன்பறிவ் சண்டைக் காட்சிகளை இயக்குவார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இப்போது லியோ படத்தை இயக்கி முடித்துள்ள லோகேஷ் கனகராஜ் அடுத்து இந்த படத்துக்கான வேலைகளில் லியோ ரிலீஸுக்கு பின்னர் ஈடுபட உள்ளார். இந்நிலையில் சமீபத்தில் அளித்த நேர்காணல் ஒன்றில் இந்த படம் பற்றி பேசியுள்ள அவர் “தலைவர் 171 படம் ரிலீஸ் தேதி முடிவு செய்யப்பட்டு, தொடங்கப்படும் படம் இல்லை. அந்த படத்துக்காக 5 மாதம் முன் தயாரிப்புப் பணிகள் நடைபெறும். அந்த படத்துக்காக எந்த அழுத்தமும் இல்லாமல் நான் ரிலாக்ஸாக வேலை செய்யப் போகிறேன்” எனக் கூறியுள்ளார்.

அடுத்த ஆண்டு தொடங்கும் இந்த படத்தை அடுத்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. அதற்கேற்றார் போல முன் தயாரிப்புப் பணிகளை தொடங்கவும் திட்டமிட்டுள்ளதாம்.