1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. What his fans did to see the superstar

சூப்பர் ஸ்டாரை காண அவரது ரசிகர்கள் செய்த செயல்.....

rajinikanth
நெல்சன்  இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படம் ஜெயிலர்.

இப்படம் வசூல் சாதனை படைத்துள்ள நிலையில், இப்படத்துக்குப் பிறகு ரஜினிகாந்த் த.செ.ஞானவேல் இயக்கும் அடுத்த படத்தில் நடிக்க உள்ளார்.

இந்த படத்தின் பூஜை சமீபத்தில் சென்னையில் நடந்தது. இன்று முதல் ஷூட்டிங் திருவனந்தபுரத்தில் தொடங்குகிறது. படத்தில் துஷாரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர், ராணா டகுபதி, பஹத் பாசில் மற்றும் அமிதாப் பச்சன் ஆகியோர் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்த படத்தின் முதல் கட்ட ஷூட்டிங்குக்காக படக்குழுவினர் ரஜினியோடு திருவனந்தபுரத்துக்கு சமீபத்தில் சென்ற    நிலையில் அங்கு  பூஜையுடன் சில காட்சிகள் படமாக்கப்பட்டன.
 
Rajinikanth

இதையடுத்து, திருநெல்வேலி மாவட்டம் பணகுடியில் தலைவர் 170 பட ஷூட்டிங் இன்று நடைபெற்றது.

எனவே    நடிகர் ரஜினிகாந்தை காண அவரது காரை ரசிகர்கள் பின் தொடர்ந்தனர்.

இதுகுறித்த புகைப்படம் மற்றும்  வீடியோ வைரலாகி வருகிறது
About Writer
Sinoj
அடுத்த கட்டுரையில்
வரலாற்றுப் படத்தில் நடிகர் அஜித்? வைரலாகும் அவரது AI புகைப்படங்கள்