1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 5 அக்டோபர் 2023 (07:44 IST)

குறைந்த பட்ஜெட்டில் உருவாகும் ரஜினி 170 படம்!

ஜெயிலர் படத்துக்குப் பிறகு ரஜினிகாந்த் த செ ஞானவேல் இயக்கும் அடுத்த படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் பூஜை சமீபத்தில் சென்னையில் நடந்தது. இன்று முதல் ஷூட்டிங் திருவனந்தபுரத்தில் தொடங்குகிறது. படத்தில் துஷாரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர், ராணா டகுபதி, பஹத் பாசில் மற்றும் அமிதாப் பச்சன் ஆகியோர் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படம் பிரம்மாண்டமான பொழுதுபோக்கு படமாக இருக்கும் என ரஜினிகாந்த் சமீபத்தில் பத்திரிக்கையாளர்களிடம் கூறியிருந்தாலும், படத்தின் பட்ஜெட் வழக்கமான ரஜினி படத்தின் பட்ஜெட்டை விட குறைவாகதான் இருக்கும் என சொல்லப்படுகிறது.

ஏனென்றால் படத்தில் நடிக்கும் அனைத்து முன்னணி நடிகர், நடிகைகளின் சம்பளமே பட்ஜெட்டின் பெரும்பகுதியை எடுத்துக் கொண்டதாகவும், அதனால் படப்பிடிப்பு மிகவும் குறைவான தொகையில்தான் நடக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.