1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 27 செப்டம்பர் 2023 (07:57 IST)

தலைவர் 170 படத்தின் கதைக்களம் இதுவா? லேட்டஸ்ட் தகவல்!

ஜெயிலர் படத்தின் ரெக்கார்ட் பிரேக்கிங் வசூலுக்குப் பிறகு ரஜினிகாந்த் த செ ஞானவேல் இயக்கும் அடுத்த படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் பூஜை சமீபத்தில் சென்னையில் நடந்தது. கடந்த மாதமே தொடங்க வேண்டிய இந்த படம் லைகாவின் பொருளாதார பிரச்சனைகள் காரணமாக இன்னும் தொடங்கப்பட வில்லை என சொல்லப்பட்டது.

இந்நிலையில் இந்த மாதம் தொடங்கும் என சொல்லப்பட்ட நிலையில் இன்னமும் அதற்கான பணிகள் தொடங்கப்படவில்லை என சொல்லப்படுகிறது. இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்குவதில் தாமதம் ஏற்படும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இப்போது இந்த படத்தின் கதைக்களம் பற்றிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி இந்த படம் கல்வித்துறை பின்புலத்தில் நடக்கும் மோசடிகளை எதிர்கொள்ளும் நபரொருவரின் கதையாக இருக்கும் என சொல்லப்படுகிறது.