வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 7 ஜூலை 2024 (11:32 IST)

பிரபல இயக்குனருக்கு இப்படி ஒரு நோயா? – நிகழ்ச்சி ஒன்றில் வெளிப்படுத்திய கரண் ஜோஹர்!

Karan Johar

இந்தி சினிமாவில் பிரபலமான இயக்குனராக, தயாரிப்பாளராக விளங்கி வருபவர் கரண் ஜோஹர். இவர் இயக்கிய குச் குச் ஹோத்தா ஹே, மை நேம் இஸ் கான், ஸ்டூடண்ட் ஆஃப் திஸ் இயர் உள்ளிட்ட பல படங்கள் இந்தியில் பாகஸ் ஆபிசில் சக்கைப்போடு போட்டது. மேலும் காஃபி வித் கரண் என இவர் நடத்தி வந்த டாக் ஷோ இந்தி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற ஒன்றாகும்.

அப்படியான பன்முகத்தன்மை கொண்ட கரண் ஜோஹருக்கு சிறு வயதில் இருந்தே ஒரு நோய் உள்ளதாம். கரண் ஜோஹர் ‘பாடி டிஸ்மோர்பியா (Body Dysmorphia) என்ற ஒரு வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

இந்த நோய் உள்ளவர்களுக்கு தங்கள் உடல் தோற்றத்தை குறித்த அதீத எதிர்மறை கருத்துகள் தோன்றி மன உளைச்சலை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. இதுபற்றி பேசிய கரண் ஜோஹர், தனக்கு எட்டு வயதில் இருந்தே இந்த நோய் இருப்பதாகவும், நிறைய மருத்துவர்களை சந்தித்து இதற்காக மருத்துகள் உட்கொண்டதாகவும் கூறியுள்ளார்.

மேலும் இதுதொடர்பாக தனக்கு மனநல பிரச்சினைகள் ஏற்பட்டதாகவும், யாரிடமும் உடலை காட்டாமல் இருக்க பெரிதாக இருக்கும் ஆடைகளையே அணிந்து வந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.