ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 21 மார்ச் 2022 (17:57 IST)

மீண்டும் சூடுபிடித்த தலைவன் இருக்கின்றான்…கமல் எடுத்த திடீர் முடிவு!

கமல் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாவதாக இருந்த தலைவன் இருக்கின்றான் திரைப்படம் குறித்த மேலதிக தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

அரசியலில் நுழைந்த கமல் நடிக்கும் கடைசிப் படமாக தலைவன் இருக்கின்றான் திரைப்படம்தான் கமல் கடைசியாக நடிக்கும் படம் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இந்த படம் தேவர் மகன் படத்தின் இரண்டாம் பாகம் என்று சொல்லப்பட்டது. தேவர் மகனில் கமல், ரேவதி மற்றும் வடிவேலு ஆகியோர் தாங்கள் நடித்த அதே கதாபாத்திரத்தில் நடிக்க, நாசரின் மகனாக வில்லனாக விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாகவும் சொல்லப்பட்டது.

ஆனால் படம் அடுத்த கட்டத்துக்கு நகராமல் அப்படியே கிடப்பில் உள்ளது. இடையில் கமல் விக்ரம் படத்தில் நடித்து முடித்துவிட்டார். இந்நிலையில் இப்போது கமல் இயக்கத்தில் மீண்டும் அந்த படத்தைத் தொடங்குவதற்கான வேலைகளை முடுக்கிவிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.