வெளியானது "தல 60" படத்தின் டைட்டில்...உச்சகட்ட கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

Papiksha| Last Updated: வெள்ளி, 18 அக்டோபர் 2019 (12:16 IST)
நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் அஜித் ஹெச் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் மீண்டும் இணைந்து நடிக்கும் "தல60" படத்தின் டைட்டில் ஓகே செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.


 
போனி கபூர் தயாரிப்பில் உருவாகிவரும் இப்படத்தை எச். வினோத் இயக்குகிறார். இப்படத்தில் அஜித்துடன் இணைந்து போனி கபூரின் மகள் ஜான்வி கபூர் தமிழில் அறிமுகமாக இருக்கிறார். மேலும் ”என்னை அறிந்தால்” படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த அருண் விஜய், ”தல 60” படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடிப்பதாக தகவல் வெளியானது. 
 
இந்நிலையில் தற்போது படத்தின் வேலையை துவங்கியுள்ள படக்குழு இன்று இப்படத்தின் பூஜையை நடத்தியுள்ளதாக வந்துள்ள தகவலால் குஷியான அஜித் ரசிகர்கள்  #THALA60PoojaDay என்ற ஹேஷ் டேக்கை  ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகின்றனர். மேலும் இப்படத்தின் டைட்டிலை அஜித்தின் ராசியான முதலெழுத்தான "வி"ல் ஆரம்பித்து வைக்க திட்டமிட்டிருந்தனர். இதற்காக பரிந்துரைக்கப்பட்ட 100-க்கும்  மேற்பட்ட பெயர்களில் இருந்து ”தல 60” படத்துக்கு ‘வலிமை’ என்ற டைட்டிலை டிக் செய்திருப்பதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே கூடிய விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.


இதில் மேலும் படிக்கவும் :