மகனுக்கு "தல அஜித்" என பெயர் வைத்து பள்ளியில் சேர்த்த ரசிகர் - ட்ரெண்டான சிறுவன்!

Papiksha| Last Updated: வியாழன், 10 அக்டோபர் 2019 (16:27 IST)
கோலிவுட் சினிமாவின் உச்ச நடிகரான அஜித்திற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். அவரது திரைப்படம் வெளிவரும் நாள் திருவிழா கோலாமாக பார்க்கப்படுவதுண்டு. மேலும் அஜித்திற்காக என்னவேனாலும் செய்யும் ரசிகர்களும் உண்டு. 


 
அந்த வகையில் தற்போது மதுரை ஜீவா நகரை சேரந்த மதுரை வீரன் என்ற அஜித்தின் தீவிர ரசிகர் ஒருவர் தனது மகனுக்கு "தல அஜித்" என பெயர் வைத்து அதே பெயரில் மாநகராட்சியில் பிறப்பு சான்றிதழ் வாங்கி பள்ளியில் சேர்த்து அசத்தியிருக்கிறார். மேலும் அவரது முதல் பெண் குழந்தைக்கு அஜித்தா என பெயர் சூட்டியிருக்கின்றனர். அஜித்தின் மீதுள்ள அளவற்ற ஈர்ப்பின் காரணமாக மதுரை வீரன் செய்த இந்த காரியத்தால் தல ரசிகர்கள் பயங்கர குஷியாகியுள்ளனர். 


 
இந்நிலையில் தற்போது தல அஜித் என பெயர் கொண்ட அந்த சிறுவனின் பள்ளி ஐடி கார்ட் இணையத்தில் வெளியாகி அஜித் ரசிகர்களால் ஷேர் செய்யப்பட்டதோடு அந்த சிறுவனின் புகைப்படத்தை ட்ரெண்ட் செய்துள்ளனர். அந்த குழநைதையின் பெற்றோருக்கு அஜித் ரசிகர்கள் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர். 
இதில் மேலும் படிக்கவும் :