திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 19 செப்டம்பர் 2022 (08:37 IST)

கமல் & ரஜினியின் ‘அவள் அப்படிதான்’ ரீமேக்கில் சிம்பு & பஹத் பாசில்!

ரஜினி கமல் மற்றும் ஸ்ரீப்ரியா இணைந்து நடித்து 1978 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘அவள் அப்படிதான்’.

ஸ்ரீப்ரியா, ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் நடிப்பில் 1978 ஆம் ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸான திரைப்படம் அவள் அப்படிதான். இயக்குனர் ருத்ரையா இந்த படத்தை இயக்கி இருந்தார். ஆனால் படம் ரிலீஸின் போது படுதோல்வி அடைந்தது. ஆனால் காலம் செல்ல செல்ல அந்த படத்தின் மீதான விமர்சனங்கள் மாறி இன்று தமிழ் சினிமா ரசிகர்கள் விரும்பி பார்க்கும் கிளாசிக் படங்களுள் ஒன்றாக மாறியுள்ளது.

இந்நிலையில் இப்போது 44 ஆண்டுகள் கழித்து இந்த படத்தை இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் ரீமேக் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஸ்ரீப்ரியா வேடத்தில் ஸ்ருதி ஹாசன் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் ரஜினிகாந்த் வேடத்தில் நடிகர் சிலம்பரசனும், கமல்ஹாசன் வேடத்தில் நடிகர் பஹத் பாசிலும் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.