கண்டு கொள்ளாத தெலுங்குத் திரையுலகம்… தமிழுக்கே திரும்பிய தளபதி இயக்குநர்

CM| Last Updated: புதன், 16 மே 2018 (16:40 IST)
தெலுங்குத் திரையுலகம் கண்டு கொள்ளாததால், மீண்டும் தமிழுக்கே திரும்பி விட்டாராம் தளபதி இயக்குநர்.
 
தளபதியை வைத்து அடுத்தடுத்து இரண்டு படங்களை இயக்கியவர் இந்த இயக்குநர். இதுவரை 3 படங்களை மட்டுமே இயக்கியிருந்தாலும், 100 ஆண்டுகள் பழமையான தயாரிப்பு நிறுவனத்தை, மூன்றாவது படத்திலேயே மூடவைத்தவர் என்ற பெருமை இவருக்கு உண்டு.
 
எனவே, தமிழில் யாரும் தன்னைக் கண்டு கொள்ள மாட்டார்கள் என்பதால், தெலுங்குப் பக்கம் தன் பார்வையைச் செலுத்தினார். ஜூனியர் என்.டி.ஆரிடம் பேச்சுவார்த்தையும் நடைபெற்றது. ஆனால், அதற்குள் எஸ்.எஸ்.ராஜமெளலி ஒரு படத்தில் ஜூனியர் என்.டி.ஆரை புக் செய்துவிட்டதால், ‘இப்போதைக்கு முடியாது’ என இவருக்குப் பதில் வந்திருக்கிறது.
 
மற்ற தெலுங்கு முன்னணி நடிகர்களிடமும் மோதிப் பார்த்தார். ஆனால், எங்குமே பாஸிட்டிவ் ரெஸ்பான்ஸ் இல்லாததால், மறுபடியும் தமிழிலேயே எந்த ஆட்டை வெட்டலாம் எனப் பார்த்துக் கொண்டிருக்கிறாராம்.


இதில் மேலும் படிக்கவும் :