1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 11 மார்ச் 2021 (10:15 IST)

விஜய் படத்தின் டைட்டில் இதுதான்… ரசிகர்கள் வெளியிட்ட போஸ்டர்!

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்துக்கு டார்கெட் எனப் பெயர் வைத்து போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளனர் ரசிகர்கள்.

விஜய் நடிப்பில் உருவாக வுள்ள தளபதி 65 படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே செல்கிறது. கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிப்பார் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் ஏப்ரல் மாத தொடக்கத்தில் தேர்தலுக்குப் பின்னர் படத்தின் படப்பிடிப்பு ரஷ்யாவில் தொடங்க உள்ளதாக சொல்லப்பட்டது. ஆனால் இப்போது படப்பிடிப்பு தொடங்க இன்னும் காலதாமதம் ஆகும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் படத்தின் மீதான எதிர்பார்ப்பின் காரணமாக ரசிகர்களே படத்துக்கு டார்கெட் என பெயர் வைத்து போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளனர். அந்த போஸ்டர் இணையத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது.