1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Updated : திங்கள், 11 மே 2020 (22:25 IST)

சிறப்பு ரயில்களில் ஏசி இல்லை – ரயில்வே துறை அறிவிப்பு

கொரோனா காரணமாக கடந்த மார்ச் 25 ஆம் தேதி முதல் ரயில்கள் இயக்கப்படவில்லை. இந்நிலையில் வரும் மே 17 ஆம் தேதியுடன் ஊரடங்கு உத்தரவு முடியவுள்ள நிலையில், நாளை முதல் நாட்டில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே துறை அறிவித்துள்ளது.

இந்நிலையில், நாளை இயக்கப்படும் சிறப்பு ரயில்களில் ஏசி பெட்டுகளில் பயணிகளுக்கு படுக்கை விரிப்பு, கம்பளி போர்வைகள் வழங்கப்படாது என இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.

மேலும் ரயிலில் பயணம் மேற்கொள்வோர் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும், ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் உடல் பரிசோதனை மேற்கொள்ளப்படும், கொரோனா பாதிப்பு இல்லாதவர்கள் மட்டுமே ரயில் பயணத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். முன்பதிவு செய்யப்பதிவு செய்யப்பட்டு கேன்சல் செய்தால் 50% கட்டணமே வசூல் செய்யப்படும் என தெரிவித்துள்ளது. அதேபோல் ரயில் நிலையக் டிக்கெட் கவுண்டர்களில் டிக்கெட் விற்பனை கிடையாது என தெரிகிறார்.