திங்கள், 30 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: ஞாயிறு, 28 ஜூலை 2024 (08:27 IST)

தமிழ் ராக்கர்ஸ் முக்கிய அட்மின் கைது.. ரூ.5000 பணத்திற்கு செய்ததாக தகவல்..!

தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் புதிய திரைப்படங்களை பதிவேற்றும் முக்கிய அட்மின் மதுரையில் கைது செய்யப்பட்டதாகவும் அவரை கேரள போலீசார் கைது செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.

புதிய திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகி ஒரு சில மணி நேரத்தில் தமிழ் ராக்கர்ஸ் என்ற இணையதளத்தில் பதிவேற்றப்பட்டு வருவது திரை உலகினர்களுக்கு பெரும் தொல்லையாக கடந்த சில ஆண்டுகளாக இருந்து வருகிறது.

தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் குறித்த விவரங்களை பெரும் முயற்சி செய்தும் கண்டுபிடிக்க முடியாத நிலையில் தற்போது கேரளா போலீசார் அதிரடியாக மதுரையில் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தின் முக்கிய நிர்வாகியை கைது செய்துள்ளனர்.

அவரிடம் விசாரணை செய்ததில் குருவாய் 5000 பணத்திற்காக கடந்த சில ஆண்டுகளாக தியேட்டரில் சிறிய கேமரா மூலம் படமாக்கிய புதிய திரைப்படங்களின் வீடியோக்களை பதிவு செய்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.

கோடிக்கணக்கில் செலவு செய்து திரைப்படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள் ஒரு பக்கம் நலிந்து கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் வெறும் ரூ.5000 பணத்திற்காக அந்த படங்களை தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் கைது செய்யப்பட்ட நபர் பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நபரிடம் மேலும் விசாரணை செய்தால் தமிழ் ராக்கர்ஸ் மொத்த குழுவினர்களும் சிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Siva