செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 26 ஜூலை 2024 (11:10 IST)

ரேடியோவில் சவுண்ட் குறைக்க சொன்னதால் காவலாளி கொலை.. ஆட்டோ டிரைவர் கைது..!

Murder
ரேடியோவில் சவுண்ட் குறைக்க சொன்ன தகராறில் காவலாளி ஒருவர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் ஆட்டோ ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த தம்பிராஜ் என்ற 61 வயது நபர் சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றில் காவலாளியாக வேலை செய்து கொண்டிருக்கிறார். இவர் மேன்சனில் தங்கி இருந்த நிலையில் அவருடன் சிவகாசி சேர்ந்த அய்யனார் என்பவரும் தங்கி இருந்தார். இவர் ஆட்டோ ஓட்டுனர் என்பது குறிப்பிடத்தக்கது

 இந்த நிலையில் அய்யனார் தனது அறையில் ரேடியோவை சவுண்டு அதிகமாக வைத்து பாட்டு கேட்டு இருந்த நிலையில் இது தம்பி ராஜுக்கு இடையூறாக இருந்தது. எனவே அய்யனாரிடம் ரேடியோ சவுண்டை குறைக்குமாறு கூறினார்.

இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதில் அருகில் இருந்த கட்டையை எடுத்த அய்யனார் தம்பிராஜ் தலையில் அடித்தார். இதனால் படுகாயம் அடைந்த தம்பிராஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சையின் பலன் இன்று உயிரிழந்தார்.

இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் ஆட்டோ ஓட்டுனர் அய்யனாரை திருவல்லிக்கேணி போலீஸ் சார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். ரேடியோவில் சவுண்டு குறைக்க சொன்ன ஒரு சின்ன விஷயத்துக்காக ஒரு கொலை நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Mahendran