ரெட்ரோ ஸ்டைலில் புகைப்படம் வெளியிட்ட தனுஷ் பட நடிகை!

Last Modified வியாழன், 14 ஜனவரி 2021 (14:33 IST)

என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தின் கதாநாயகி மேகா ஆகாஷ் வெளியிட்டுள்ள புகைப்படம் கவனத்தை ஈர்த்துள்ளது.

தனுஷுடன் எனை நோக்கி பாயும் தோட்டா, ரஜினியின் பேட்ட திரைப்படம் மற்றும் ஒரு பக்கக் கதை ஆகிய படங்களில் நடித்தவர் மேகா ஆகாஷ். கடைசியாக சிம்புவுடன் வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தில் நடித்தார். அதன் பின்னர் அவருக்கு வாய்ப்புகள் இல்லை என்றாலும் சமூகவலைதளங்களில் மிகவும் தீவிரமாக இயங்கி வருகிறார்.

இந்நிலையில் இப்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று இணையத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது. 60 களில் கதாநாயகிகள் இருப்பது மேக்கப் செய்து ரெட்ரோ ஸ்டைலில் அவர் வெளியிட்ட புகைப்படத்தைப் பார்த்த பலரும் சரோஜா தேவி போல இருப்பதாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.இதில் மேலும் படிக்கவும் :