திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வியாழன், 14 ஜனவரி 2021 (14:48 IST)

சிம்புவின் மாநாடு பட புதிய போஸ்டர் ரிலீஸ்

நடிகர் சிம்புவின் மாநாடு படப் புதிய போஸ்டரை இன்று படக்குழு வெளியிட்டுள்ளது.

சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள ‘ஈஸ்வரன்’இன்று  பொங்கல் தினத்தில் உலகெங்கிலும் வெளியாகின் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. மாஸ்ட்ர ரிலீசானாலும் இதற்குப் போட்டியாக வெளியான ஈஸ்வரன் பட வெற்றியால் சிம்புவின் ரசிகர்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்நிலையில் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் படம் மாநாடு. சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரித்து வருகிறது.

அரசியல் களத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படம் தயாராகி வருகிறது. இதில் அப்துல் காலிக் என்ற இஸ்லாமிய இளைஞர் கதாப்பாத்திரத்தில் சிம்பு நடித்து வருகிறார்.

இப்படத்தின் ஷூட்டிங் வேகமாக நடைபெற்று வருகிறது. சில ஆண்டுகளாக சிம்புவின் படங்கள் வரவேற்பு பெறாத நிலையில், அவர் தற்போது கமிட்டாகியுள்ள படங்களால் அவர் மீண்டும் பிஸியாகிவிட்டார். ஆன்மீகத்திலும் இறங்கியுள்ளார்.

இந்நிலையில், நடிகர் சிம்புவின் மாநாடு படப் புதிய போஸ்டர் இன்று படக்குழு வெளியிட்டுள்ளது.

இதில், சிம்பு ஸ்டைலிஸாக உள்ளார். அதே புகைப்படத்தில் தலைகிழான இமேஜுடன் எஸ்.ஜே.சூரியா கண்ணாடி அணிந்து மிரட்டலாக காட்சி தருகிறார். இது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.