செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 2 மார்ச் 2020 (21:52 IST)

விஷாலிடம் கால்ஷீட் வாங்கி தருவதாக மோசடி: பிரபல இயக்குனர் கைது

விஷாலிடம் கால்ஷீட் வாங்கி தருவதாக மோசடி
விஷாலிடம் கால்ஷீட் வாங்கி தருவதாக ரூபாய் 45 லட்சம் பணத்தை மோசடி செய்ததாக பிரபல இயக்குனர் ஒருவர் மீது அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் அந்த இயக்குனர் கைது செய்து செய்யப்பட்டிருப்பது கோலிவுட் திரையுலகை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
சவுகார்பேட்டை, பொட்டு உள்ளிட்ட ஒரு சில படங்களை இயக்கிய இயக்குனர் வடிவுடையான் என்பவர் தற்போது சன்னி லியோன் நடிப்பில் வீரமாதேவி என்ற படத்தை இயக்கி வருகிறார்
 
இந்த நிலையில் இயக்குனர் வடிவுடையான் மீது திரைப்பட தயாரிப்பாளர் நரேஷ் காத்தோடு என்பவர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில் நடிகர் விஷாலிடம் கால்ஷீட் வாங்கி வைத்திருப்பதாகவும் அந்த கால்சீட்டை தனக்கு தருவதாக கூறி தன்னிடம் மூன்று தவணைகளில் 45 லட்ச ரூபாய் பணத்தை வாங்கி விட்டதாகவும் இந்த பணத்தை அவர் இரண்டு ஆண்டுகளாக திருப்பி தரவில்லை என்றும் விஷால் கால்ஷீட் குறித்தும் எதுவும் பேசவில்லை என்றும் புகார் கொடுத்துள்ளார் 
 
இந்த புகார் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் இயக்குனர் வடிவுடையான் பணம் வாங்கியது உண்மை என்று தெரிய வந்ததும் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் கோலிவுட் திரையுலக இயக்குனர் ஒருவர் மோசடி புகாரில் கைது செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது