புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 13 ஆகஸ்ட் 2021 (16:54 IST)

மீண்டும் தமிழ் படங்களுக்கு வரிவிலக்கு… எல்லா பேரும் மாறும் போலருக்கே!

தமிழில் பெயர் வைக்கும் படங்களுக்கு தமிழ்நாட்டு அரசின் மாநில அரசு வரி நீக்கப்படும் என திரையுலகினருக்கு முதல்வர் உறுதி அளித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

தமிழகத்தின் முதல்வராக கலைஞர் கருணாநிதி இருந்த போது தமிழில் பெயர் வைக்கும் படங்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதையடுத்து பலரும் தமிழில் பெயர் வைக்க ஆரம்பித்தனர். ஆனால் அதன் பின்னர் இந்த வரிவிலக்கு சலுகை நீக்கப்பட்டது. அதனால் படங்களுக்கு இஷ்டம் போல வைக்க ஆரம்பித்தனர்.

இந்நிலையில் இப்போது ஜி எஸ்டி வரி விதிக்கப்பட்டு வரும் நிலையில் தமிழக அரசின் மாநில வரியை நீக்கவேண்டும் என தயாரிப்பாளர்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதைக் கேட்ட தமிழக அரசு நேர்மறையான பதிலை அளித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இதுபற்றி தமிழக அரசு சார்பில் விரைவில் தமிழில் பெயர் வைக்கப்படும் படங்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்படலாம் என சொல்லப்படுகிறது.