1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By mahendran
Last Modified: வெள்ளி, 13 ஆகஸ்ட் 2021 (16:28 IST)

60 மாணவர்களுக்கு கல்வி செலவை ஏற்ற விஷாலின் அறக்கட்டளை!

நடிகர் விஷால் தனது தாய் தேவி பெயரில் ஒரு அறக்கட்டளையை நடத்தி வருகிறார்.

நடிகர் விஷால் சினிமாவில் நடிப்பது மட்டும் இல்லாமல் அரசியல் உள்ளிட்ட பொது விஷயங்களிலும் ஆர்வமாக கலந்து கொள்பவர். அப்படி தான் தான் தாய் தேவியின் பெயரில் ஒரு அறக்கட்டளை நடத்தி அதன் மூலம் நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்.

அந்த வகையில் தமிழகம் முழுவதும் உள்ள 60 மாணவர்களுக்கான உயர்கல்வி செலவை ஏற்றுள்ளார். இந்த மாணவர்கள் பொருளாதார ரீதியாக பின் தங்கியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.