திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinojkiyan
Last Updated : வியாழன், 28 நவம்பர் 2019 (21:30 IST)

’நீங்கள் என் இதயத்தில் இன்றும் அப்படியேதான்’ ...’நீங்களின்றி நானில்லை’ - இயக்குநர் சேரன் உருக்கம்!

தமிழகத்தில், பிரபல தனியார் தொலைக்காட்சியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய  'பிக் பாஸ் சீசன் - 3' களைகட்டிய முடிவடைந்து விட்டது. பல களேபரங்கள் சர்ச்சைகளுக்கு பின் மக்களின் பொழுதுபோக்கு அம்சம் ஒன்று  குறைந்துள்ளது. 
இனி அடுத்த பிஸ் பாஸ் 4 எப்போது ? அதில் யாரெல்லாம் பங்குபெறுவார்கள் ? யார் தொகுத்து வழங்குவது ? என்பது போன்ற கேள்விகளை மக்கள் இப்போதே எழுப்பத் தொடங்கிவிட்டனர்.
 
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற இயக்குநர் சேரனுக்கு ஏராளமான மக்கள நெருக்கமாகி விட்டனர்.
 
இந்நிலையில், இயக்குநர் சேரன் தனது டுவிட்டர்  பக்கத்தில் , இயக்குநர் கே.எஸ். ரவிக்குமாருடன் அவர் எடுத்துக் கொண்ட ஒரு போட்டோவுடன் அவர் பதிவிட்டுள்ளதாவது :
 
பாரதிகண்ணம்மா பூஜை அழைப்பிதழுக்கு இப்படி ஒரு போட்டோ உங்கள் அருகில் இருந்து எடுத்து அதைத்தான் அச்சிட்டேன் சார்.. 22 வருடங்களுக்கு பின் அதேபோல ஒரு போட்டோ..
காலங்களும் தோற்றங்களும் காட்சிகளும்தான் மாறியுள்ளது.
 
நீங்கள் என் இதயத்தில் இன்றும் அப்படியேதான் சார்.. நீங்களின்றி நானில்லை இவ்வாறு சேரன் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

இதற்கு, நெட்டிசன்கள் பலரும், சேரனைப் பாராட்டில், இன்னும் பழையதை மறக்காமல் உள்ளனர் என தெரிவித்துள்ளார்.