புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 30 செப்டம்பர் 2019 (19:59 IST)

ட்யூமரால் பாதிக்கப்பட்ட பிரபல நடிகை! – சிகிச்சைக்கு முன் உருக்கமான பதிவு!

தமிழ் சினிமாவில் அம்புலி, சவாரி உள்ளிட்ட படங்களில் நடித்து புகழ்பெற்றவர் சனம் ஷெட்டி. தற்போது பெரிய அளவில் படங்களில் நடிக்காவிட்டாலும், அவ்வபோது சில விளம்பர படங்களில் மட்டும் நடித்து வருகிறார்.

பிக்பாஸ் போட்டியில் பங்குபெற்றுள்ள தர்ஷனின் தோழியான இவர் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து அடிக்கடி பதிவிட்டு வந்தார். இந்நிலையில் இவர் ட்யூமர் நோயால் பாதிக்கப்பட்டிருந்திருக்கிறார். தற்போது அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சனம் உருக்கமான ஒரு பதிவை எழுதியுள்ளார்.

அதில் ”சில நாட்களுக்கு முன்பு எனக்கு ட்யூமர் இருப்பது பற்றி தெரிய வந்தது. ஆனால் அதை நான் கண்டுகொள்ளாமல் விட்டு விட்டேன். அதனால் இப்போது அறுவை சிகிச்சை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன். என்னுடைய சிறிய அறிவுரை என்னவென்றால் உங்கள் ஆரோக்கியம் சம்பந்தமான விஷயங்களில் அலட்சியமாக இருக்காதீர்கள். எனக்காக கடவுளிடன் பிரார்த்தனை செய்யுங்கள்.” என்று கூறியுள்ளார்.

இன்ஸ்டாகிராமில் அவர் பதிவிட்டுள்ள இதை கண்டதும் அவரது ரசிகர்கள் திகைத்து போயினர். எனினும் சனம் நலனுக்காக வேண்டி கொள்வதாகவும், மீண்டும் நல்ல ஆரோக்கியத்தோடு அவர் வரவேண்டுமென்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.