செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha
Last Updated : திங்கள், 30 செப்டம்பர் 2019 (17:41 IST)

பிக்பாஸ் வீட்டில் என்ன நடக்கிறது..! டைட்டில் யாருக்கு..? உடைந்தது உண்மை!

பிக்பாஸ் வீட்டிலிருந்து தர்ஷன் வெளியேறியதால் மக்கள் பலரும் கோபத்தில் இருந்து வருகின்றனர். மேலும் சில ஒட்டிங்கில் பிரச்சனை என கூறி வருகின்றனர். ஆனால், ஒட்டிங்கில் ஒரு பிரச்சனையும் இல்ல. டைட்டில் வின்னர்  சாண்டி அல்லது லொஸ்லியா. அது ஏற்கெனவே தீர்மானம் பண்ணியாச்சு. சாண்டி விஜய் டிவி ஆள். லொஸ்லியா இனிமேல் விஜய் டிவி ஆள். 


 
உலகம் முழுதும் ஈழத்தமிழர்கள் இருக்கிறார்கள். அங்கங்கே ப்ரோக்ராம் பண்ணி காசு சம்பாதிக்க ஒரு ஈழத்தை சேர்ந்த நபர் வேணும். இதில் தர்ஷன் லட்சியம் வேறு அவனுக்கு டைட்டிலை கொடுத்தால் அவன் அதுக்கு அப்பறமும் விஜய் டிவி பின்னால் நிக்க மாட்டான். ஏற்கெனவே அவருக்கு கதை சொல்ல அவரை வைத்து படம் எடுக்க வெளியே பல இயக்குனர்கள் தயாராக உள்ளார்கள். எனவே அவன் விஜய் டிவி நிகழ்ச்சிகளுக்கு நாடு நாடாக சுத்த மாட்டார் . அவனுக்கு டைட்டில் கொடுப்பது விஜய் டிவி க்கு எந்த லாபமும் தராது.


 
ஆனால், லொஸ்லியா அப்படி இல்ல. படம் நடிக்க வேண்டாம் என்று சொல்லக்கூடிய அவளை தந்தை டிவி சேனல் இல் சேர அனுமதிப்பார். இதை வைத்து பார்த்தால் ஈழத் தமிழர்களும் எங்களோடு இருக்கிறார்கள் என்று புலம்பெயர் ஈழத் தமிழருக்கு கடை விரிக்கலாம். ப்ரோக்ராம் பண்ணலாம்....காசு பார்க்கலாம்.
 
தர்ஷன் உள்ளே இருந்தால் லொஸ்லியாவுக்கு க்கு டைட்டிலை கொடுக்க முடியாது. அதனால் முதல் சதி கோல்டன் டிக்கெட்டை  தர்ஷனுக்கு கிடைக்காமல் செய்தது. கோல்டன் டிக்கெட்டிற்கு வைத்த பிக்பாஸ் டாஸ்க்கில் 2 இல் மட்டுமே தர்ஷன் ஜெயிச்சான். தெர்மோகோல் பேக்கிற்கு கவின் லாஸ் சதி பண்ணினாங்க. கமலே அதை சுட்டிக்காட்டினார். 


 
ஆனால், பிக்பாஸ் கண்டு கொள்ளவில்லை. சைக்கிள் டாஸ்க் தர்ஷனுக்காக ஷெரினும் முகனுக்காக தர்ஷனும் ஓடினார்கள். தர்ஷன் போல ஷெரின் ஓட்ட மாட்டார். அதனால் தர்ஷனுக்கு Points போய்டும். கோல்டன் டிக்கெட் கிடைக்காம பண்ணினா அப்பறம் ஒட்டு  இல்ல. மக்கள் தீர்ப்பு என்று தர்ஷனை தூக்கி வெளியில் போடலாம். போட்டாச்சு....
 
இப்போ மலேசியா முகின் இருக்கிறார். வந்ததுக்கு அவருக்கு கோல்டன் டிக்கெட் கொடுத்தாச்சு. அவ்வளவு தான். நாம எப்படி ஒட்டு  போட்டாலும் முகனுக்கு  டைட்டிலை கொடுக்க மாட்டாங்க. ஏன்னா மிகினும்   தர்ஷன் மாதிரி லட்சியம் உள்ள ஒருவர். விஜய் டிவிக்கு பின்னால் நிற்க மாட்டார். இது தவிர கோல்டன் டிக்கெட் என்னும் பெருமையை கொடுத்து மலேசிய மக்களை சமாளிச்சாச்சு.
 
ஈழத்தமிழர் அளவுக்கு மலேசிய மக்கள் வெளிநாடுகளில் இல்ல. மலேசியாக்கு போகும் போது கோல்டன் டிக்கெட் கை கொடுக்கும். இப்போ லொஸ்லியாவுக்கு  டைட்டிலை கொடுத்தால்  வெளிநாட்டை சேர்ந்த ஒருவருக்கு டைட்டிலை கொடுத்தோமென்ற பெயர் விஜய் டிவிக்கு வந்துவிடும். தர்ஷனுக்கு கொடுக்கவில்லை என்றாலும்  லொஸ்லியாவுக்கு  கொடுத்தோம் என்று ஈழத்தமிழரை திருப்தி படுத்தலாம். டைட்டிலை வாங்கிய லொஸ்லியா விஜய் டிவி தவிர வேறு எங்கும் போகமாட்டார். ஒவ்வொரு நாடாக சென்று ப்ரோக்ராம் செய்து காசு பார்க்கலாம்.


 
முகின் உனக்கு டைட்டில் வின் பண்ண தர்ஷனை போல் எல்லா தகுதியும் இருக்கு. ஆனாலும் இவர்களிடமிருந்து டைட்டில் எதிர்பார்க்காதே. வெளியில் வந்ததும் தர்ஷனோடு சேர்ந்து உன் வாய்ப்புக்களை தேடிக்கொள் அவ்வளவு தான்.. என்று ஒரு நபர் விஜய் டிவி வெளியிட்ட ப்ரோமோவி வீடியோவிற்கு கீழ் தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார். அவர் சொல்வது பெரும்பாலும் சரி என்று தான் தோன்றுகிறது.  அவர் சொல்வது போன்றே லொஸ்லியா டைட்டில் வின் செய்வாரா என்று பாப்போம்.