வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 24 செப்டம்பர் 2024 (14:47 IST)

திருப்பதி லட்டு குறித்து நகைச்சுவை பேச்சு… கடிந்துகொண்ட பவன் கல்யாண்… மன்னிப்பு கேட்ட கார்த்தி!

96 படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குனர் பிரேம்குமார் தற்போது கார்த்தி, அரவிந்த் சாமி நடிப்பில் ‘மெய்யழகன்’ என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார்.  படத்தில் மற்ற முக்கிய வேடங்களில் ராஜ்கிரண் மற்றும் ஸ்ரீதிவ்யா ஆகியோர் நடிக்கின்றனர். படத்துக்கு கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். இந்த படத்தை சூர்யா மற்றும் ஜோதிகாவின் 2டி எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது.

படம் செப்டம்பர் 27 ஆம் தேதி ரிலீஸாகிறது. இந்த படத்தின் போஸ்டர்கள், கிளர்வோட்டம்(டீசர்) எல்லாம் மிக வித்தியாசமாக அமைந்தததால் ரசிகர்களுக்கு இந்த படத்தின் மேல் எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. ஆக்‌ஷன் காட்சிகள் இல்லாமல் மெல்லிய உணர்வு கொண்ட குடும்ப உறவுகள் பற்றிய படமாக இருக்கும் என தெரிகிறது. இந்த படம் தெலுங்கிலும் அதே தேதியில் ரிலீசாகிறது.

அது சம்மந்தமான ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது திருப்பதி லட்டு குறித்து தற்போது எழுந்துள்ள சர்ச்சைகள் குறித்து நகைச்சுவையான கமெண்ட் ஒன்றை தெரிவித்தார். அது அந்த நிகழ்ச்சியில் சிரிப்பலைகளை எழுப்பியது. ஆனால் இது குறித்து ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். திருப்பதி லட்டு பல லட்சம் மக்களின் உணர்வுப்பூர்வமான விவகாரம். அதை சினிமா நிகழ்ச்சிகளில் வேடிக்கைப் பொருளாக பேசுவது சரியல்ல என பேசியிருந்தார். இந்நிலையில் இது குறித்து நடிகர் கார்த்தி வருத்தம் தெரிவித்துள்ளார். தானும் திருப்பதி வெங்கடேஸ்வர பெருமாளின் தீவிர பக்தர்தான் என்றும் தன்னிலை விளக்கம் அளித்துள்ளார்.