செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: ஞாயிறு, 4 அக்டோபர் 2020 (15:42 IST)

தமன்னாவுக்கு கொரோனா: தனியார் மருத்துவமனையில் அனுமதி

தமன்னாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 
 
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தனது பெற்றோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக தமன்னா தனது சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்நிலையில் தற்போது தமன்னாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருவதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.