கரோனா வைரஸ் பரவல் தடுப்புக்கான பாராட்டு மாநாட்டில் ஷிச்சின் பிங்கின் உரை
பெய்ஜிங்
புதிய ரக கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தியதற்கான பாராட்டு மாநாடு 8ஆம் நாள் பெய்ஜிங்கிலுள்ள மக்கள் மாமண்டபத்தில் நடைபெற்றது. அடிப்படை சிந்தனையில் ஊன்றி நின்று, சரியான பாதையில் சென்று, பல்வேறு இடர்பாடுகளை சமாளிக்க வேண்டும் என்று ஷி ச்சின் பிங்தெரிவித்தார்.
திடீரென்று நிகழ்ந்த கடுமையான வைரஸ் பரவலை எதிர்நோக்கும் போது, ஒன்றிணைத்து, முன்னேறி, பொருளாதார வளர்ச்சியை நிதானப்படுத்தி, வாழ்க்கை மற்றும் உற்பத்தி ஒழுங்கை மீட்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
பொது மக்களின் உயிரை முதல் இடத்தில் வைப்பது, சீன மக்களின் பாரம்பரியத்தையும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நோக்கத்தையும் வெளிகாட்டியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.