வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 19 ஜூன் 2019 (17:47 IST)

திமிங்கலத்தின் எச்சத்தை கடத்திய நபர் ! வளைத்துப் பிடித்த போலீஸ்

மும்பையில் ரூ1.7 கோடி மதிப்பில் திமிங்கலத்தின் எச்சத்தை கடத்திய நபரை மும்பை போலீஸர் கைது செய்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமிங்கலத்தின் எச்சமாக வெளிவரும் அம்பர் எனப்படும் திரவம், வாசனை செண்டு, மற்றும்  பல்வேறு விதமான பொருட்கள் செய்வதற்காகப் பயன்படுத்தபடுகிறது.
 
இதில் முக்கியமாக திமிங்கலத்தின் அம்பர் கொண்டு தயாரிக்கப்படும் திரவியம் விலை உலகில் விலைஉயந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.
 
அதவாது திமிங்கலத்தின் வயிற்றுப் பகுதியில் இயற்கையாகவே சுரக்கும் இந்த அம்பர் தற்போதைய உலகச் சந்தையில் பலகோடிகளுக்கு விற்பனை ஆகிறது.அதனால் இதனைச் சட்டத்திற்குப் புறம்பாகக் கடத்திச் செல்வதை பலர் தொழிலாகவே வைத்துள்ளார்கள்.
 
இந்நிலையில் மும்பையில் ஒருவர் திமிங்க எச்சத்தை கடத்திச் சென்றதற்க்காக போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைதான அவரிடமிருந்து ரூ.1.7 கோடி மதிப்புள்ள திமிங்கல எச்சத்தை போலீஸர் பறிமுதல் செய்துள்ளனர். இவர் மீது தேசிய வனவிலங்கு பாதுகாப்புச்சட்டத்தில் க்லீழ் வ்ழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.