செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 18 ஜூலை 2019 (22:31 IST)

கவுண்டமணியுடன் கனெக்சன் ஆன தமன்னா திரைப்படம்

தமிழ், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக தமன்னா தற்போது தமிழில் இரண்டு படங்களிலும் தெலுங்கில் இரண்டு படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தமன்னா ஒரு திகில் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்
 
இந்த படத்தை 'அதே கண்கள்' என்ற படத்தை இயக்கிய ரோஹின் வெங்கடேசன் என்பவர் இயக்கி வருகிறார். தமன்னா முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படத்தில் மன்சூர் அலிகான், யோகி பாபு, பகவதி உட்பட பலர் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த மார்ச் மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஜிப்ரான் இசையமைக்கும் இந்த படத்தை ஃபாஷன் ஸ்டுடியோ என்ற நிறுவனம் தயாரித்து வருகிறது.
 
இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டிலை பிரபல நடிகை டாப்சி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த படத்திற்கு 'பெட்ரோமாக்ஸ்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. 'பெட்ரோமாக்ஸ்' என்றாலே அனைவருக்கும் ஞாபகம் வருவது 'வைதேகி காத்திருந்தாள்' திரைப்படத்தில் கவுண்டமணி பேசும் ஒரு வசனம் தான். பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணுமா என்ற வசனத்தை யாராலும் மறக்க முடியாது. இந்த நிலையில் கவுண்டமணியின் புகழ்பெற்ற வசனத்தையே தமன்னா படத்தின் டைட்டிலாக வைத்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி விட்டதாகவும் இன்னும் ஓரிரு வாரங்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு முற்றிலும் முடிந்து விடும் என்றும் வரும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதம் இந்த படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது