திங்கள், 23 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: செவ்வாய், 9 மார்ச் 2021 (22:13 IST)

ராஷ்மிகாவும் இல்லை, பூஜா ஹெக்டேவும் இல்லை: தளபதி 65ல் இணைகிறார் தமன்னா?

தளபதி விஜய் நடிக்க இருக்கும் 65வது திரைப்படமான தளபதி 65 திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க உள்ளது 
 
ரஷ்யாவில் முதல் கட்ட படப்பிடிப்பும், சென்னையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பும் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக வெளிவந்துள்ள தகவலின்படி இந்த படத்தில் நாயகியாக ராஷ்மிகா மந்தனா அல்லது பூஜா ஹெக்டே ஆகிய இருவரில் ஒருவர் நடிப்பார் என்று கூறப்பட்டது
 
சமீபத்தில் வெளியான தகவலின்படி பூஜா ஹெக்டே கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது வெளிவந்திருக்கும் புதிய தகவலின்படி இந்த படத்தின் நாயகி கேரக்டருக்கு தமன்னாவிடம் படக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அனேகமாக அவர் ஒப்பந்தமாக அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது
 
திடீர் திருப்பமாக தளபதி 65 படத்தில் தமன்னா நடிக்க இருப்பது ஆச்சரியத்தை அளித்துள்ள்து. ஏற்கனவே விஜய்யுடன் சுறா என்ற படத்தில் தமன்னா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது