1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 31 ஆகஸ்ட் 2024 (11:33 IST)

காவாலா பாடல் எதிரொலி… சூர்யா படத்திலும் நடனம் ஆடுகிறாரா தமன்னா?

சூர்யா, கார்த்திக் சுப்பராஜ் கூட்டணியில் ஒரு படம் உருவாகி வரும் ‘சூர்யா 44’ எனத் தற்காலிகமாக அழைக்கப்பட்டு வருகிறது. படத்துக்கு இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படத்தை கார்த்திக் சுப்பராஜ் மற்றும் சூர்யா ஆகிய இருவரும் இணைந்து தயாரிக்கின்றனர். படத்தின் ஒளிப்பதிவாளராக ஸ்ரேயாஸ் கிருஷ்ணா படத்தொகுப்பாளராக ஷஃபீக் முகமது அலியும், ஸ்டண்ட் இயக்குனராக கெச்சா காம்பக்தேயும், காஸ்ட்யூம் டிசைனராக ப்ரவீன் ராஜாவும் பணியாற்றுகின்றனர்.

இந்த படத்தின் ஷூட்டிங் முதல் கட்டமாக அந்தமான் தீவுகளில் நடந்தது. அங்கு கிட்டத்தட்ட 40 நாட்கள் ஷூட்டிங் நடத்த திட்டமிட்டிருந்த நிலையில் அதற்கு முன்பாகவே ஷூட்டிங்கை முடித்து சென்னை திரும்பியது படக்குழு. அதையடுத்து கடந்த சில நாட்களாக ஷூட்டிங் ஊட்டியில் நடந்து முடிந்தது. அடுத்த கட்ட ஷூட் விரைவில் தொடங்கும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் சமீபத்தில் இந்த படத்துக்காக ஒரு பாடல் காட்சியை படக்குழு படமாக்கியதாகவும், இந்த பாடலில் காவாலா புகழ் தமன்னா நடனமாடியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. முன்னதாக இந்த பாடலில் ஸ்ரேயா நடித்துள்ளதாக சொல்லப்பட்டது. ஆனால் இப்போது தமன்னாவை வைத்து அந்த பாடலை படமாக்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.