என்னது விஜய் படத்தில் செல்வராகவனா? அதுவும் நடிகராகவா? வியப்பூட்டும் செய்தி!

Last Modified சனி, 8 மே 2021 (15:09 IST)

விஜய் 65 படத்தில் செல்வராகவன் வில்லனாக நடிக்க பேச்சுவார்த்தை நடத்துவதாக சொல்லப்படுகிறது.

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தளபதி 65. இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் ஜார்ஜியாவில் நடைபெற்றது என்பதும் அந்த படப்பிடிப்பை முடித்துவிட்டு கடந்த சில நாட்களுக்கு முன்னர் படக்குழுவினர் சென்னை திரும்பினர் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் தளபதி 65 படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெறும் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது சென்னையில் உள்ள பிரம்மாண்டமான ஸ்டூடியோ ஒன்றில் மால் செட் போடப்பட்டு வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.


இந்நிலையில் இப்போது இந்த படத்தைப் பற்று ருசிகரமான செய்தி ஒன்று வெளியாகி உள்ளது. இந்த படத்தில் ஒரு முக்கியமான வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க இயக்குனரும் தற்போது நடிகராக அவதாரம் பூண்டுள்ள செல்வராகவன் நடிக்க பேச்சுவார்த்தை நடப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.இதில் மேலும் படிக்கவும் :