திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 30 ஏப்ரல் 2021 (08:16 IST)

செல்வராகவன் உதவியாளர் இயக்கத்தில் ரித்திகா சிங்!

நடிகை ரித்திகா சிங் செல்வராகவன் உதவியாளர் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளாராம்.

இறுதிச்சுற்று படத்தின் மூலம் சிறப்பான அறிமுகம் பெற்றவர் நடிகை ரித்திகா சிங். விளையாட்டு வீராங்கனையான இவர் தனது விளையாட்டுக் கனவுகளை விட்டுவிட்டு சினிமாவுக்கு வந்தார். ஆனால் அது தவறான முடிவாக இருக்குமோ என்று அவர் நினைக்கும் அளவுக்கு வாய்ப்புகளே கிடைக்கவில்லை.

இந்நிலையில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதை ஒன்றை செல்வராகவனின் உதவி இயக்குனர் மைக்கேல் என்பவர் ரித்திகா சிங்கை வைத்து இயக்க உள்ளாராம்.